உலகம்

Gaza | Palestine | Israel | வரிசைகட்டிய வாகனங்கள்.. காஸாவை விட்டு வெளியேறும் மக்கள்..

காஸாவை விட்டு வெளியேறும் மக்கள்..

thanthitv

Gaza | Palestine | Israel | வரிசைகட்டிய வாகனங்கள்.. காஸாவை விட்டு வெளியேறும் மக்கள்.. #Israel #Gaza #Palestine #UN காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் இருந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பாலஸ்தீனியர்கள் ரஃபா எல்லை வழியாக வெளியேற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. ரெட் கிரெசென்ட் மருத்துவமனையிலிருந்து, உலக சுகாதார அமைப்பின் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பேருந்துகள் மூலம் போரில் காயமடைந்த நோயாளிகள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர். பல மாதங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் ரஃபா எல்லைச் சாவடியை பகுதியளவில் திறந்துள்ளது. 2 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் காசா பகுதியில் இருந்து மக்கள் வெளியேறவும் உள்ளே நுழையவும் ஒரே வழியாக ரஃபா எல்லை உள்ளது. இந்த எல்லை திறப்பு, அமெரிக்காவின் ஆதரவுடன் உருவான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் முக்கிய அம்சமாகும். ஆனால், கடுமையான பாதுகாப்பு சோதனைகள் காரணமாக மக்கள் வெளியேற்றத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்