உலகம்

ஜோ பைடனுக்கு தேர்தல் நிதி வழங்கிய அமெரிக்க வாழ் இந்தியர்களின் பட்டியல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தனக்கு ஒரு லட்சம் டாலருக்கும் மேலாக பிரசார நிதி திரட்டியவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தனக்கு பிரசார நிதி வழங்கியவர்களின் பட்டியலை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.

அதில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பெரும்பாலானோர் நிதி வழங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் குழுவின் தலைவர்களான சுதேஷ் சாட்டர்ஜி, ரமேஷ்க் கபூர், சேகர் என் நரசிம்மன், ஆர் ரங்கசாமி, அஜய் ஜெயின் பூட்டோரியா ஆகியோர் ஒரு லட்சத்துக்கும் அதிக அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளனர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிலா ஜெயபாலும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்

மேலும், பைடனுக்கு தேர்தல் பிரசார நிதி வழங்கிய அமெரிக்க இந்தியர்களின் எண்ணிக்கை, முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமா மற்றும் பில் கிளிண்டன் ஆகியோருக்கு வழங்கியவர்களை விட குறைவாகவே உள்ளது.

இரண்டு ஆண்டுகளில், நன்கொடையாளர்களிடம் இருந்து இதுவரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை பைடன் திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை பிரசார நிதியாக பைடன் திரட்டியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்