அமெரிக்காவில் ஆபத்தான ரசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற ரயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஐயோவா மாகாணத்தில், சிப்லே என்ற நகருக்கு அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ரயிலில், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அமோனியா மற்றும் ரசாயன உரங்கள் இருந்தன. விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளில் சிலவற்றில் தீப்பற்றியது. இதனையடுத்து ரசாயனங்கள் மூலம் அருகே வசிப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க, விபத்து பகுதியின் சுற்று வட்டாரங்களில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். விபத்து நடந்த பகுதியை சுற்றி, ஐந்து சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் வசிப்பவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.