உலகம்

டிரம்ப் விவாதத்தில் தூங்கியேவிட்டேன் - ஜோ பைடன்

தந்தி டிவி

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்பும் சமீபத்தில் நேரடியாக விவாதம் செய்தனர். அப்போது பைடன் செயல்களில் காணப்பட்ட தடுமாற்றம் அவரது சொந்த கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியது. சிலர் அவரை அதிபர் தேர்தலில் இருந்து விலகவும் கேட்டு வருகிறார்கள். ஆனால் போட்டியிலிருந்து விலக போவது இல்லை என கூறிவிட்ட பைடன், விவாதத்தின் போது தடுமாறியதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். விவாதத்தில் ஸ்மார்ட்டாக செயல்படவில்லை என ஒப்புக்கொண்டிருக்கும் பைடன், அதற்கு விவாதத்திற்கு முந்தைய நாட்களில் உலக நாடுகளுக்கு பயணம் செய்ததால் சரியாக தூங்கவில்லை என காரணம் கூறியிருக்கிறார். சரியாக தூங்காததால், விவாத மேடையில் கிட்டத்தட்ட தூங்கிவிட்டேன் என பைடன் புது விளக்கம் கொடுத்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்