அடுத்த வாரம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், 2030 ஆம் ஆண்டுக்கான உலக கால்பந்து போட்டியை இங்கிலாந்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்வது உறுதி என இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதற்கான பணத்தை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது பெண்களுக்கான கால்பந்து போட்டி வளர்ச்சியடைய பெரிதும் உதவும் என குறிப்பிட்டுள்ளார்.