இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டஅவர், இளவரசர் பிலிப், ராணுவம் மற்றும் சமூக சேவைகளில் புகழ்பெற்று விளங்கியதாக குறிப்பிட்டு உள்ளார். பிலிப்பின் மறைவு செய்தியால், தனது எண்ணங்கள் பிரிட்டன் மக்கள் அரச குடும்பத்தினரிடமும் இருப்பதாகவும், பிலிப்பின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் பிரதமர் மோடி கூறி உள்ளார்.