உலகம்

"உலகம் முழுவதும் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ்" - கொரோனாவால் 2 ஆயிரத்து 700 பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா, உலகையை உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால், 2 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான பல நாடுகளிலும் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றன. பாகிஸ்தானில் 2 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஈரானில் இருந்து வந்தவருக்கு, நோய் தொற்று இருந்ததாக கூறியுள்ளார். பிரான்சில் கொரோனாவால் இராண்டாவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதேபோல், பிரேசிலை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்ததுள்ளது. ஜார்ஜாவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்