இத்தாலியில், கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று ஒரு நாளில் மட்டும் 250 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 266 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் ஒரு நாளில் கொரோனாவினால் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகவும் இது பதிவாகி உள்ளது. மேலும், இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 17 ஆயிரத்து 660 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒருவார காலத்திற்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டுப்பாடுகளை விதித்துள்ள, அந்நாட்டு அரசு, கடைகள், வணிக நிறுவனங்களை மூடவும் உத்தரவிட்டுள்ளது. இதனால், லாம்பார்டி மாகாணம் பிற பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.