கொரோனா தொற்று முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் உகான் நகரில் சிலருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு வசிக்கும் 1 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் உகான் நகர அதிகாரிகள் கூறி உள்ளனர்.