உலகம்

நெதர்லாந்தில் அதிகரிக்கும் கொரோனா - உலக போருக்கு பின் முதல் முறையாக ஊரடங்கு

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலக போருக்கு பின் நெதர்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.

தந்தி டிவி

நெதர்லாந்தில் அதிகரிக்கும் கொரோனா - உலக போருக்கு பின் முதல் முறையாக ஊரடங்கு

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலக போருக்கு பின் நெதர்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. இதன் காரணமாக தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளை மீறி வெளியே வருபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

சீன கடலில் முகாமிட்டுள்ள அமெரிக்க கப்பல்கள் - பதவியேற்ற சில நாட்களில் ஜோ பைடன் அதிரடி

தென் சீன கடல்பகுதியில் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் குழு அதிரடியாக நுழைந்துள்ளது. சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி தென் சீன கடலில் முகாமிட்டுள்ள அமெரிக்க போர் கப்பலால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் சீன கடல்பகுதியில் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்காக வழக்கமான ரோந்து பணியில் அமெரிக்க கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்று சில நாட்களில் அமெரிக்க கடற்படை மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, சீனா குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றம் இருக்காது என்பதையே உணர்த்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பெருக்கமடையும் பைரின் வகை குரங்குகள் -பார்வையாளர்களை கவர்ந்த தங்க நிற குட்டிகள்

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் அரிய வகை பைரின் இலை குரங்கு கூட்டத்தை வன பராமரிப்பாளர் கண்டறிந்துள்ளார். அழிந்துவரும் இந்த வகை குரங்குகளை பாதுகாக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தற்போது 11 தங்க நிற பைரின் குட்டிகள் உள்ள நிலையில் அவற்றின் எண்ணிக்கை ஏப்ரல் மாத‌த்திற்குள் இருபதை தொடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பைரின் மரத்தின் இலைகளை மட்டும் உண்டு வாழும் இந்த வகை குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாக்ஸ் உலக கோப்பை பனிசறுக்கு போட்டி - 20 வயதான அமெரிக்க வீராங்கனை சாதனை

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற லாக்ஸ் உலக கோப்பை பனிசறுக்கு போட்டியில் அமெரிக்க வீராங்கனை சோலோ கிம்(Chloe Kim) வெற்றி பெற்றுள்ளார். 89.75 புள்ளிகளுடன் கிம் முதலிடத்தையும், 76 புள்ளிகளுடன் ஜப்பான் வீராங்கனை ஓனோ மிட்சுகி இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.20 வயதான கிம், 2018 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்க‌து. கணுக்கால் அறுவை சிகிச்சை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பனிசறுக்கு போட்டிகளில் பங்கேற்காத நிலையில், தற்போதைய வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாக சோலோ கிம் தெரிவித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு