உலகம்

அமெரிக்காவில் பிரபல நிறுவன கட்டடத்தை தகர்க்க விமானத்துடன் வானில் வட்டமிட்டு மிரட்டல்

தந்தி டிவி

அமெரிக்காவில் பிரபல நிறுவன கட்டடத்தை தகர்க்க விமானத்துடன் வானில் வட்டமிட்டு மிரட்டல்

அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் உள்ள வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தை இடிக்க போவதாக, அந்நாட்டு விமானி ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ட்யூபேலோ நகரத்தில், விமானி ஒருவர் திருடப்பட்ட விமானம் ஒன்றை வைத்து, வால்மார்ட் நிறுவனத்தின் கட்டிடத்தை இடிக்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். கட்டிடத்தை விமானம் வட்டமடித்து கொண்டே இருந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வால்மார்ட் ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விமானி திருடிய விமானம், அமெரிக்காவின் தென் கிழக்கு ஏவியேஷனுக்கு சொந்தமான சிறிய ரக பீச் கிராஃப்ட் கிங் ஏர் விமானம் என்று தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் விமானியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், எரிவாயு இல்லாமல் விமானம் தரையிறங்கியது. இதையடுத்து, விமானியை போலீசார் கைது செய்தனர். 

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு