உலகம்

உலகின் மிகப்பெரிய மின்சார விமானத்தை தயாரித்துள்ள சீன நிறுவனம்

thanthitv

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஆட்டோ பிளைட் AUTO FLIGHT நிறுவனம் 5 டன் எடையுள்ள மின்சாரத்தில் இயங்கும் புது ரக விமானத்தை தயாரித்துள்ளது.

மேட்ரிக்ஸ் (Matrix) அல்லது V5000 என்று அழைக்கப்படும் இந்த விமானம் உலகின் மிகப்பெரிய மின்சார விமானமாக கருதப்படுகிறது.

ஒரே நேரத்தில் 10 பயணிகள் வரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்த விமானம் 20 மீட்டர் இறக்கைகள் (Wingspan) மற்றும் 17.1 மீட்டர் நீளம் கொண்டது.

இது பயணிகள் (Air Taxi) மற்றும் 1.5 டன் வரையிலான சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

செங்குத்தாக மேலே எழும்பி, பின்னர் சாதாரண விமானம் போல் கிடைமட்டமாக பறக்கும் தொழில்நுட்பத்தை (Lift & Cruise) இது பயன்படுத்துகிறது.

இந்த விமானத்தின் சோதனையோட்டம் (Transition flight) வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

West Bengal | Election2026 | மே.வங்கத்தில் விறுவிறு வாக்குப்பதிவு.. 3 மணிக்கே இத்தனை சதவீதமா!

TVK Vijay | விஜய் அழைப்பு.. ஆன்மீக பயணம் முடித்த வேகத்தில் புதிய உத்தரவு

ReElection | WestBengal | EVMல் BJP சின்னத்தை மறைத்து ஒட்டப்பட்ட டேப்? மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு

Kollywood News | பின்வாங்காத தயாரிப்பாளர் சங்கம்.. இறங்கி வந்த நடிகர் சங்கம்

#BREAKING || Westbengal Election 2026 | 2ம் கட்ட தேர்தல் - வாய் பிளக்க வைத்த 1 மணி நிலவரம்