உலகம்

China | India | எல்லையில் சீனா செய்த மாற்றம்... இந்தியாவுக்கு நிம்மதி செய்தி

எல்லையில் சீனா செய்த மாற்றம்... இந்தியாவுக்கு நிம்மதி செய்தி

thanthitv

China | India | எல்லையில் சீனா செய்த மாற்றம்... இந்தியாவுக்கு நிம்மதி செய்தி இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், சீனா தனது ராணுவப் படைகளின் குவிப்பை கணிசமாகக் குறைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் 2025-26-ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு அக்டோபர் உடன்பாட்டுக்கு முன்பு லடாக் எல்லையில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீன வீரர்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா-சீனா இடையிலான அரசியல், தூதரக மற்றும் ராணுவ மட்டத்திலான தொடர் பேச்சுவார்த்தைகளால் எல்லையில் அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா படைகளை குறைத்திருந்தாலும், எந்த அவசர நிலையையும் எதிர்கொள்ள இந்திய பாதுகாப்புப் படைகள் முழு தயார் நிலையில் உள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

Byelection | 4 கட்சியையும் எதிர்த்து `கம்யூ.,’ நிறுத்திய வேட்பாளர்கள்.. அவர்களின் `மாஸ் பின்னணி’

Protest | புதிய தலைமை செயலகத்தை எதிர்த்து ஒன்றிணைந்த 9 மீனவ கிராமம்

BREAKING || தாராபுரம் இடைத்தேர்தல்...இவ்வளவு பேர் போட்டியா?-இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பு மனுக்கள்

BREAKING || "அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை..." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்