வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சீனாவின் டியான்ஜோ-10 விண்கலம் சீனாவின் விண்வெளி நிலையமான டியான்காங் நிலையத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும், டியான்ஜோ-10 சரக்கு விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-7 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் பாய்ந்தது. சுமார் 6.2 டன் பொருட்கள், விண்வெளி வீரர்களுக்கான உபகரணங்கள் மற்றும் எரிபொருட்கள் இதில் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், டியான்காங் விண்வெளி நிலையத்துடன் டியான்ஜோ-10 விரைவில் இணைக்கப்படும் என சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.