உலகம்

63 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்த சீன அதிபர் -நடிகை பத்மினியின் நாட்டியத்தை கண்டு ரசிப்பு

சீன அதிபர் ஒருவர் தமிழகத்திற்கு வந்து சென்ற நிகழ்வு 63 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றுள்ளது

தந்தி டிவி

சீன அதிபர் சூ என் லாய் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை அப்போதைய ஆளுநர் ஸ்ரீ பிரகாசா வரவேற்றார். இதன் பின்னர் அவர் இன்றைக்கு நேரு உள்விளையாட்டு அரங்கமாக உள்ள இடத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். அதே தினம் ஜெமினி ஸ்டூடியோவை சுற்றி பார்த்தார். அப்போது ஒரு இந்தி படத்திற்கான நடனக்காட்சி சூ என் லாய் முன்னிலையில் படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் பத்மினி நடனம் ஆடினார். பிறகு சீன அதிபரை ஸ்டூடியோவில் உள்ள பல பகுதிகளுக்கு அழைத்து சென்று காண்பித்து ஜெமினி ஸ்டூடியோ அதிபர் வாசன் படப்பிடிப்பு நடைபெறும் விதம் குறித்து விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து அவர் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையிலுள்ள ஐசிஎஃப் வளாகத்தை பார்வையிட்டுள்ளார். ஐசிஎஃப் வளாகத்தின் வருகை பதிவேட்டில் இது ஒரு நவீன ரயில்வே தயாரிப்பு நிறுவனம் எனவும் சீனர்கள் இங்கு வந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சீன பிரதமர் சூ என்லாய் எழுதியுள்ளார். இதன்பிறகு மாமல்லபுரம் சென்ற சூ என் லாய் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டார். பின்னர் மாமல்லபுரம் அருகே 9 கிமீ தொலைவில் உள்ள குழிப்பாந்தண்டலம் எனும் கிராமத்தில் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார். பின்னர் டிசம்பர் 7ஆம் தேதி சீன அதிபர் சூ என் லாய் சென்னையிலிருந்து சீனா புறப்பட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி