7 ஆண்டுகளுக்கு ஒருமுறை
ரத்த நிறத்தில் தோன்றிய நிலா
இயற்கை வானியல் நிகழ்வான சந்திர கிரகரணம், நேற்றிரவு தோன்றியது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் ஏற்படும் சந்திர கிரகரணம், நேற்றிரவு 9.57 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.27 மணி வரை நீடித்தது. அதிலும், இரவு 11.42 மணி முதல் 12.33 மணி வரை முழு சந்திர கிரகணம் நடைபெற்றது. அந்த நேரத்தில் அடர் சிவப்பு நிறத்தில் நிலா தோன்றுவதால், blood moon என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய நிகழ்வான சிவப்பு நிலாவும் நேற்றிரவு தோன்றியது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில், நள்ளிரவிலும் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்து சந்திர கிரகரணத்தை கண்டு ரசித்தனர்.