உலகம்

``அண்ணா வாறார் யாரும் அழ வேண்டாம்''சாந்தனை ஆரத்தி எடுத்து வரவேற்ற தங்கை

தந்தி டிவி

வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் உடல், வாகனம் மூலம் மாங்குளம் - கிளிநொச்சி வழியாக, யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது. வடமராட்சியை வந்தடைந்து நெல்லியடி மற்றும் தீருவிலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, 'அண்ணா வறார் யாரும் அழ கூடாது' என்று ஆரத்தி எடுத்து சாந்த‌னின் சகோதரி வரவேற்றது காண்போரை கண்கலங்க செய்த‌து. பின்னர் வீட்டில் அனைவரும் ஓம் நமசிவாய சொல்லி அஞ்சலி செலுத்தினர். சாந்த‌னின் இறுதி ஊர்வலம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வல்வைட்டித்துறை, பொலிகண்டி வழியாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என கூறப்பட்டுள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்