உலகம்

பிரிட்டனின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு டிரம்ப் வாழ்த்து

பிரிட்டனின் புதிய பிரதமாராக, போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
பிரிட்டனின் புதிய பிரதமாராக, போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் எம்பி-க்கள் ஏற்க மறுத்து விட்டதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து தெரசா மே கடந்த ஜூன் மாதம் ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. பிரதமர் பதவிக்கு, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் மற்றும் வெளியுறவு துறை உயரதிகாரியான, ஜெர்மி ஹன்ட் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக நடந்த போட்டியில் ஜெர்மி ஹண்ட்டை வென்று பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனிடையே இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றிற்கும் போரிஸ் ஜான்சனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Breaking | CM Vijay | Jail Break | சிறை கைதிகள் தப்பிய சம்பவம் | அதிரடியில் இறங்கிய CM விஜய்

Anbilmahesh Case``போலீஸிடம் சிக்கிய அன்பில் வீடியோ’’ - கேஸில் ஷாக் திருப்பம்

Breaking | CM Vijay | அம்பை இடைத்தேர்தல் பிளானோடு களத்தில் இறங்கும் CM விஜய்

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி