ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள மிருகக் காட்சி சாலையில், நோரா, ரான்சோ போலார் கரடி தம்பதிகளுக்கு இரண்டு குட்டிகள் பிறந்துள்ளன. கடந்த நவம்பர் 9 ஆம் தேதி இந்த குட்டிகள் பிறந்த நிலையில், இரண்டாவது குட்டி அன்றே உயிரிழந்தது. இந்நிலையில் மற்றொரு குட்டி கரடியை பாதுகாக்கும் வகையில், அதனையும் தாய் போலார் கரடி நோராவையும், மிருகக் காட்சி சாலை ஊழியர்கள் தந்தை கரடியான ரான்சோவிடம் இருந்து தனியாக பிரித்து வைத்துள்ளனர்.