ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் நினைவு தினம் இன்று... உள்ளூர் போட்டியில் விளையாடியபோது தலையில் பந்து பட்டு பலத்த காயம் அடைந்த பிலிப் ஹியூஸ், கடந்த 2014ம் ஆண்டு இதே நாள் மரணம் அடைந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக தான் விளையாடிய போட்டியில் 63 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் 63 not out எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் உருக்கத்துடன் பிலிப் ஹியூஸை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் அவரது ரசிகர்களும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.