ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கான்பெராவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அதீத வெப்பம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், தலைநகரான கான்பெராவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கான்பெரா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.