கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ந்த காட்டுத் தீயால் ஆஸ்திரேலியா பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. இந்நிலையில், காட்டுத் தீ பாதிப்புக்கு நிவாரணம் திரட்டுவதற்காக, சிட்னி நகரில் பல்வேறு பிரபலங்களை கொண்டு இசை கச்சேரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை காண ஆயிரக்கணக்கான ரசிகர் பட்டாளம் ஒன்று திரண்டனர்.