உலகம்

நோயை வென்று சாதனை படைத்த வீரர்

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர் மன உறுதியால் தடகள வீரராக மாறினார்.

தந்தி டிவி

* JUSTIN GALLEGOS .. அமெரிக்காவை சேர்ந்த 20 வயதான தடகள வீரர்.. ஆனால்.. JUSTIN GALLEGOS க்கு CEREBERAL PALSY என்ற நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர்.

* எழுந்து நிற்கவே JUSTIN ஆல் முடியாது என்று மருத்துவர்கள் கூற, தனது மன உறுதியால் JUSTIN எழுந்து நின்றார். அத்துடன் நிற்காமல் ஓடவும் செய்தார் JUSTIN.. நரம்பு தள்ர்ச்சியால் பாதிக்கப்பட்டாலும், தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் பயிற்சி செய்தார் JUSTIN.. பயிற்சியின் போது தொடர்ந்து நிற்க முடியாமல் கீழே விழுந்து..மறுகனமே எழுந்து நின்று மீண்டும் பயிற்சியை தொடங்குவாராம் JUSTIN..

* பயிற்சி காலத்தில் என்றுமே காயம் இல்லாமல் வீடு திரும்பியதில்லை. ஆனால் ஜஸ்டினின் மன உறுதி அவரை மீண்டும் பயிற்சி களத்திற்கு கொண்டு சென்றது.

* பள்ளி, கல்லூரி காலத்தில் நடைபெறும் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஜஸ்டின், கடைசியாக பந்தயத்தை முடிப்பார். ஆனால் , முதலில் பந்தயத்தை முடிப்பவருக்கு விழும் கைத்தட்டை விட, ஜஸ்டினுக்கு தான் அதிகளவு கைத்தட்டு கிடைக்கும்.

* தனது 18வது வயதில் நெடுந்தூர பந்தயத்தில் பங்கேற்கும் முடிவை எடுத்தார் ஜஸ்டின். வேகமாக ஓட முடியவில்லை என்றாலும், நீண்ட நேரத்திற்கு ஒரே வேகத்தில் ஓடும் திறமையை வளர்த்து கொண்டார் ஜஸ்டின்.. இது அவருக்கு கையும் கொடுத்தது.

* HALF MARATHON போட்டியை 2 மணி நேரத்திற்கு ஓடி முடிக்க வேண்டும் என்ற கனவுடன் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் ஜஸ்டின். இந்த நிலையில், பிரேத்யேக காலணியும், ஸ்பான்சர்ஷிப் கிடைத்தால் வாழ்க்கையை வென்றுவிடலாம் என்ற ஐஸ்டின் முயற்சி செய்தார். இதனை அறிந்த NIKE நிறுவனம், ஐஸ்டின் கலந்து கொண்ட பந்தயத்திற்கு நேரில் சென்றது.

* ஐஸ்டின் பந்தயத்தை முடித்தவுடன், ஸ்பான்சராக உங்களை ஏற்று கொள்ள தயார் என்று அந்த நிறுவனம் அறிவித்தவுடன், கண்ணீர் விட்டு கதறி அழுதார் JUSTIN..

* இதன் மூலம் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட வீரர் ஒருவருக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைத்தது இதுவே முதல் முறை.. இனி JUSTIN பயிற்சியையும், போட்டியிலும் கலந்து கெண்டாலே போதும், அதற்கு ஆகும் செலவை NIKE நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். எழுந்து நிற்கவே முடியாத வீரர் தற்போது, தொழில்முறை தடகள வீரராக மாறி மற்றவர்களுக்கு ஒரு பாடம்க திகழ்கிறார்..

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்