America || கலிஃபோர்னியாவில் உலக நாய் சர்ஃபிங் தொடர் ராட்சத கடல் அலைகளின் மேல், மிகச் சாதாரணமாக வாக்கிங் போவது போல நாய்கள் 'சர்ஃபிங்' செய்து அசத்திய விசித்திரப் போட்டி கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. அமெரிக்காவின் பசிபிகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடக்கும் 'உலக நாய் சர்ஃபிங் சாம்பியன்ஷிப்' போட்டியில், இம்முறையும் நூற்றுக்கணக்கான நாய்கள் அலைகளைச் சறுக்கிக்கொண்டு வந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. நாய்களுக்கென்றே பிரத்யேக உடைகள், ரசிகர்களின் கைதட்டல்கள் என அந்த இடமே விழாக் கோலம் பூண்டிருந்தது. நாய்கள் இவ்வளவு சாமர்த்தியமாக அலைகளில் சறுக்குவதை தாங்கள் பார்த்ததே இல்லை என கூறிய பார்வையாளர்கள் போட்டியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.