அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள தேவாலயத்தில் காரை மோத செய்து ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். தேவாலயத்தில் வழக்கம் போல பொதுமக்கள் பிரார்த்தனைக்காக கூடிய போது வேகமாக வந்த கார் ஒன்று ஆலயத்தின் வாசலில் மோதி உள்ளே புகுந்தது. மோதிய வேகத்தில் காரில் இருந்து தீப்பற்றியதால் தேவாலயம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. மேலும், காரில் இருந்த தாமஸ் ஜேக்கப் ஆலயத்தில் வழிபாடு நடத்தியவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 4 பேர் உயிரிழந்தனர். 8 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரை சுட்டுக் கொலை செய்தனர்.