உலகம்

களைகட்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் - டிரம்பை கடுமையாக சாடிய ஜோ பைடன்

வரும் செவ்வாய்கிழமை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் களைகட்டியுள்ளது.

தந்தி டிவி

வரும் செவ்வாய்கிழமை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பிரச்சாரம் களைகட்டியுள்ளது. ஐயோவா மாகாணத்தில் உள்ள டெஸ் மொயின்​ஸ் என்ற இடத்தில் ஆதரவு திரட்டிய ஜோ பைடன், அதிபர் டிரம்பின் புத்தி​க்கூர்மை பற்றி சந்தேகம் எழுப்பியுள்ளார். அமெரிக்காவில் 2 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், அதனை டிரம்ப் கையாண்டவிதம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை ஜோ பைடன் வைத்துள்ளார். ஐயோவா மாகாணத்தில் உள்ள 6 வாக்குகளை கடந்த முறை டிரம்ப் தட்டிச்சென்ற நிலையில், இந்தாண்டு கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. கடந்த 2008 மற்றும் 2012 அதிபர் தேர்தலில் ஓபாமாவுக்கு ஆதரவாக ஐயோவா இருந்தது. இதுவரை 8 கோடியே 38 லட்சம் பேர் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்