உலகம்

டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்​பு

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலினா டிரம்ப்புக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தந்தி டிவி

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலினா டிரம்ப்புக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, டிரம்பை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை டிரம்ப் ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து இருநாட்டு உயரதிகாரிகளையும் அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தலைவர்கள் இணைந்து நின்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப்

இந்த நிகழ்வினைத் தொடர்ந்து, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற டிரம்ப், அங்கு மலர் வளையம் வைத்தும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

அவரது மனைவியும் உடன் இருந்து மரியாதை செலுத்தினார்.

ஐதராபாத் இல்லத்தில் டிரம்ப் - மோடி சந்திப்பு

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து அவர்கள் இருவரும் கலந்து ஆலோசித்ததாக தெரிகிறது. முன்னதாக, ஐதராபாத் இல்லம் வந்த இருவரும் கூட்டாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி