கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை அவசர தேவைக்காக பயன்படுத்த அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு இதற்கான ஒப்புதலை வழங்கியது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குணமடைந்தவர்களிடமிருந்து பெறப்படும் ரத்த பிளாஸ்மாவைக் கொண்டு சிகிச்சை அளிப்பதால் உயிரிழப்புகள் குறையும் என நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்கர்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் கிடைப்பதில் உள்ள தடைகளை அகற்ற வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வந்த நிலையில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.