America | Canada | Trump | ஒற்றைக்காலில் நிற்கும் டிரம்பால் அதிர்ச்சி அமெரிக்கா, கனடாவை இணைக்கும் பிரமாண்ட பாலம்- திறப்பு விழா எப்போது? டிரம்பின் பிடிவாதத்தால் அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் பிரமாண்ட பாலம் திறப்பு விழா காண்பதில் இழுபறி நீடிக்கிறது. அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரையும், கனடாவின் வின்ட்ஸர் நகரையும் இணைக்கும் வகையில் பிரமாண்ட பாலம் ஒன்றை 4 பில்லியன் டாலர் மதிப்பில் கனடா கட்டி முடித்தது. இந்தப் பாலம் திறப்பு விழா கண்டதும், இருநாடுகளுக்கும் இடையிலான பயண தூரம் கணிசமாக குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரத்தால் இந்த பாலத்தைத் திறக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் சம்மதம் தெரிவிக்காததால், இழுபறி நீடிக்கிறது.