பழமைவாதத்திற்கு பெயர் போன ஆப்கானிஸ்தானில், காதலர் தினத்தையொட்டி ஃபேஷன் ஷோ நடைபெற்றது. தலைநகர் காபூலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆண்கள் மற்றும் பெண்கள், நவநாகரீக உடை அணிந்து ஓய்யாரமாக நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானை மீட்க இது போன்ற நிகழ்ச்சிகள் பயன் தருவதாக, இந்த நிகழ்ச்சியின் ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்