உலகம்

நடிகர் அலெக் பால்ட்வின் துப்பாக்கியால் சுட்டார் - பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழப்பு

அமெரிக்காவில் படப்பிடிப்பின் போது, எதிர்பாராதவிதாக நடிகர் அலெக் பால்ட்வின் துப்பாக்கியால் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார்.

தந்தி டிவி

அமெரிக்காவில் படப்பிடிப்பின் போது, எதிர்பாராதவிதாக நடிகர் அலெக் பால்ட்வின் துப்பாக்கியால் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார். ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ரஸ்ட்'. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் செட் அமைத்து நடைபெற்று வந்தது. படத்திற்காக தயாரிக்கப்பட்ட போலி துப்பாக்கியால் அலெக் பால்ட்வின் சுடும் காட்சியை நேற்று படமாக்கினார்கள். அப்பொழுது அந்த துப்பாக்கியில் இருந்து வெளியான குண்டு பாய்ந்து ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் பலியானார். இயக்குநர் ஜோயல் படுகாயம் அடைந்தார். ஜோயலின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. ரஸ்ட் படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார் அலெக் பால்ட்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தி கிரோ படப்பிடிப்பில் சினிமா துப்பாக்கியால் சுட்டதில் ப்ரூஸ் லீயின் மகன் பிரான்டன்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்