#russia #china #nato #ukraine ஐரோப்பாவில் உக்ரைனை உள்ளடக்கிய புதிய ராணுவக் கூட்டணிக்கு ரஷ்யா கண்டனம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜின்பிங்கைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஐரோப்பாவில் உக்ரைனை உள்ளடக்கிய புதிய ராணுவக் கூட்டணியை உருவாக்கும் முயற்சிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்தத் திட்டம் ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவதையும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்க்க அமெரிக்காவிற்கு கூடுதல் சுதந்திரம் அளிப்பதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் விமர்சித்தார்.