உலகம்

அதிசயம் நிகழ்ந்தது! உலகின் முதல் நபர் - 1 வயது குழந்தை பெற்ற பெருமை!

தந்தி டிவி

அதிசயம் நிகழ்ந்தது! உலகின் முதல் நபர் - 1 வயது குழந்தை பெற்ற பெருமை!

இதய செயலிழப்பால் இறந்தவரிடம் இருந்து குடல் தானமாக பெறப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையை ஸ்பெயினைச் சேர்ந்த 1 வயது குழந்தை பெற்றுள்ளது...

உலகளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னணியில் உள்ள நாடு ஸ்பெயின்...

அந்நாட்டைச் சேர்ந்த எம்மா என்ற குழந்தை பிறந்து 1 மாதம் இருந்த போது குடல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டது..

இதனால் பல உள்ளுறுப்புகள் சேதம் அடையத் துவங்கிய நிலையில், 17 மாதங்களான எம்மாவுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன்படி, இதய செயலிழப்பால் உயிரிழந்த நபரிடம் இருந்து உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு அது எம்மாவுக்கு பொருத்தப்பட்டது.

குடல் மட்டுமல்லாது கல்லீரல், கணையம், மண்ணீரல் ஆகிய உறுப்புகளும் எம்மாவுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு எம்மா நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்