Ship | Sea | Accident | உள்ளே இருந்த 270 பேர்.. நடுக்கடலில் அப்படியே தலைக்குப்புற கவிழ்ந்த கப்பல்
வடக்கு சைப்ரஸ் கரைக்கு அருகே 270 பயணிகளுடன் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சைப்ரஸ் தீவின் வடக்குக் கடற்கரையில் கிரேனிய (Kyrenia) துறைமுகத்திலிருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட சற்று நேரத்திலேயே எதிர்பாராதவிதமாக படகுக்குள் நீர் புகுந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தப்பிய பயணிகள் கவிழ்ந்த படகின் மேல் நின்று கொண்டு உதவிக்காக காத்திருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்புப் படகுகள் மூலம் இதுவரை 237 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
#sea #ship #boat #accident