உலகம்

டெக்சாஸ் : வீட்டில் குவியல் குவியலாக பாம்புகள் மீட்பு

புற்றுல கூட இவ்வளவு பாம்பு இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் ஒரு வீட்டில் 100க்கும் மேற்பட்ட பாம்புகள் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

தந்தி டிவி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் ஒன்று விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது திடீரென தீ பிடித்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வீட்டிற்குள் புகுந்து தீயை அணைத்த போது, உள்ளே குவியல் குவியலாக பாம்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஒவ்வொன்றாக அப்புறப்படுத்திய போது தான் அங்கு 100க்கும் மேற்பட்ட பாம்புகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதில் பல கொடிய விஷம் கொண்ட பாம்புகளும், 5 முதல் 6 அடி நீளம் கொண்ட பல மலைப்பாம்புகளும் அடக்கம். வீட்டில் ஏற்பட்ட தீ காரணமாக அத்தனை நாட்களாக பதுங்கி இருந்த பாம்புகள், ஒட்டுமொத்தமாக வெளியே வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

TN Budget 2026 | தமிழகமே காத்திருக்கும் பட்ஜெட் -என்னென்ன சர்ப்ரைஸ் இருக்கோ..

Palani | Supreme Court | பழனி கோயில் வழக்கு.. முக்கிய திருப்பம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Horse Trading Case | குதிரை பேரம் வழக்கில் திருப்பம்.. இருவருக்கு ஜாமின் கொடுத்த ஐகோர்ட்

Senthil Balaji | TN Politics | `வாபஸ்..' செந்தில் பாலாஜி திடீர் முடிவு

PM Modi | Minister Nirmala Sitharaman | அச்சுஅசலாக பிரதமர் போலவே.. அதிர்ச்சியில் இந்திய மக்கள்