செய்திகள்

விம்பிள்டன் - அல்கராஸை வீழ்த்தி சாம்பியன் ஆன சின்னர்

தந்தி டிவி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இத்தாலியைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் சின்னர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினைச் சேர்ந்த 2ம் நிலை வீரர் அல்கராஸூடன் சின்னர் மோதினார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய போட்டியின் முதல் செட்டை அல்கராஸ் 6க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் வென்ற நிலையில், அடுத்தடுத்த செட்களில் சின்னர் அபாரமாக விளையாடினார். 6க்கு 4, 6க்கு 4, 6க்கு 4 என்ற கணக்கில் தொடர்ச்சியாக 3 செட்களை வென்ற சின்னர், அல்கராஸை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை முத்தமிட்டார். பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டியில் அல்கராஸிடம் அடைந்த தோல்விக்கு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றி சின்னர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்