வானிலை

Asuran Cyclone Update| மிக தீவிரமாக உருமாறும் அசுரன் புயல்.. இப்போது எங்கே?எப்போது நெருங்கும்?

மிக தீவிரமாக உருமாறும் அசுரன் புயல்.. இப்போது எங்கே?எப்போது நெருங்கும்?

thanthitv

#akwancyclone #asurancyclone வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அக்வான் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு கிழக்கே சுமார் 610 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 660 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள இந்தப் புயல், மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் அக்வான் புயல், நாளை மாலை தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நவம்பர் 19ஆம் தேதி காலை மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று, நவம்பர் 20ஆம் தேதி நண்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூர் – துனி இடையே, யானம் கடற்கரையை ஒட்டிய பகுதியில் மிகத் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 145 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Madurai Tanishq | தனிஷ்க் கொள்ளை விவகாரம்.. நிஷாந்துக்கு முக்கிய பரிசோதனை

Madurai | Jewelry | tanishq | நகைக்கொள்ளை வழக்கு.. நிஷாந்திடம் விடிய விடிய துருவித் துருவி விசாரணை!

Madurai Heist | பரபரப்புக்கு இடையே.. மதுரை அழைத்துவரப்பட்ட நிஷாந்த்.. உச்சகட்ட பாதுகாப்பு..!

Kovai | Library| Arrest திடீர் திருப்பம் அகல்விளக்கு புத்தக உரிமையாளர் அதிரடி கைது

Arunraj | Minister| Stalin ஸ்டாலின் சொன்ன ஒற்றை வார்த்தை சுடச்சுட பதிலடி கொடுத்த அமைச்சர் அருண்ராஜ்