செய்திகள்

இந்தியா உடனான 7 ஒப்பந்தங்களை நிறுத்தும் அமெரிக்கா

தந்தி டிவி

ஆகஸ்ட் 15-ல் அமெரிக்காவின் USAID இந்தியாவில் தனது நடவடிக்கைகளை நிறுத்தியது

இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்கா 21 மில்லியன் டாலர் செலவிடவில்லை என அமெரிக்க தூதரகமே தெரிவித்து உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் யு.எஸ்.ஏ.ஐ.டி. (USAID) நிறுவனம் பற்றி கேரளா மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு ஆகஸ்ட் 15-ம் தேதி யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) இந்தியாவில் தனது நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

"2014 - 2024 வரை இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க, 21 மில்லியன் டாலர் நிதியை அமெரிக்கா வழங்கவில்லை" என அமெரிக்க தூதரகம் கூறியதாக மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஜூலை 29, 2025 யு.எஸ்.ஏ.ஐ.டி., (USAID) இந்தியாவில் அனைத்து செயல்பாடுகளையும், ஆகஸ்ட் 15, 2025-க்குள் முடிக்க அமெரிக்க தூதரகம் திட்டமிட்டு இருந்தாகவும்...

"ஆகஸ்ட் 11, 2025 டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், பொருளாதார விவகாரத்துறைக்கு இது தொடர்பாக கடிதம்" எழுதியதாகவும்..

அக்கடிதத்தில், "இந்திய அரசுடனான 7 கூட்டு ஒப்பந்தங்களும் ஆகஸ்ட் 15-ம் தேதி நிறுத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்து இருந்ததாக" மத்திய அரசு விளக்கி உள்ளது.

Delimitation Bill | Women Reservation | நாடே பரபரத்த.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி

Salem | EPS | ``அதிமுக அரசு அமைந்தவுடன் தீபாவளி அன்று..'' | ஈபிஎஸ் சொன்னதும் விண்ணை பிளந்த சத்தம்

EPS | Salem | ``நம்ம ஆளு யாரும் சரக்கடிக்க மாட்டீங்கனு தெரியும்..'' | Dataவை சொல்லி அதிரவிட்ட ஈபிஎஸ்

Iran | Hormuz | Trump | India | Khamenei | ஈரான் எடுத்த முடிவு.. உலகிற்கே Bigg Breaking..!

Breaking | Valparai Accident | 13வது கொண்டைஊசி வளைவில் நேர்ந்த பயங்கரம் | நடுங்கவிடும் கோர காட்சிகள்