செய்திகள்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (02.12.2025) | 7 PM Headlines |Thanthi TV

தந்தி டிவி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்தகோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்...எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது...

SIR குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்...விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் காலக்கெடுவை வலியுறுத்தக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்...

செல்போன்களில் சைபர் பாதுகாப்புக்கான சஞ்சார் சாத்தி APP கட்டாயம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது...புதிய செல்போன்களில் சஞ்சார் சாத்தி APPஐ ப்ரீ-இன்ஸ்டால் செய்ய வேண்டும் என செல்போன் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது...

செல்போன்களில் சஞ்சார் சாத்தி APPஐ கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாக விமர்சித்துள்ளார்...சஞ்சார் சாத்தி APP குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு தெரிவித்துள்ளார்...

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடைபெறும் என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதி நித்யானந்த் ராய் தெரிவித்தார்.

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடைபெறும் என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதி நித்யானந்த் ராய் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி நாடாளுமன்ற வளாகத்திற்கு நாயை அழைத்து வந்த விவகாரம்...நாய்கள்தான் இன்று விவாதிக்கப்படும் முக்கிய விஷயம் எனவும்,அப்பாவி நாய் என்ன செய்தது எனவும் ராகுல் கேள்வி எழுப்பினார்...

சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் தென்மேற்கு நோக்கி மெதுவாக நகர்கிறது...

அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக மழை தொடர்கிறது..., கீழ்ப்பாக்கம், அம்பத்தூர் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்...

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது...பயிர் பாதிப்பு கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்...

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது...ரோடு ஷோ நடத்தும் அளவிற்கு சாலைகள் இல்லை எனக்கூறி மறுக்கப்பட்ட நிலையில் பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது...

ADMK | Kovai | Edappadi Palanisamy | பரபரப்பான சூழலில் அறிவித்த ஈபிஎஸ்

Gas Cylinder Booking கேஸ் சிலிண்டர் புக் பண்றீங்களா? - எண்ணெய் நிறுவனங்கள் க்ளியர் கட்டாக விளக்கம்

Breaking | LPG Shortage | சிலிண்டரை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் | மாறிய காட்சிகள்

#BREAKING || Gas Cylinder Shortage | அதிரடி ஆக்க்ஷனில் அதிகாரிகள் - சிக்கிய 17 சிலிண்டர்கள்

Hormuz Strait | India``இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு வெற்றி’’ - ஹார்முஸ் ஜலசந்தியில் வழிவிடும் ஈரான்