செய்திகள்

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு இடியை இறக்கிய அமலாக்கத்துறை

தந்தி டிவி

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு இடியை இறக்கிய அமலாக்கத்துறை

#siddaramaiah #thanthitv

மைசூரு நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சித்தராமையாவின் மனைவிக்கு முறைகேடாக நில ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் லோக் ஆயுக்தா போலீசார், முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், சித்தராமையா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கை சித்தராமையா மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இந்த சூழலில், மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தால் பெறப்பட்ட 14 மனைகளை, திரும்பி ஒப்படைப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதி கடிதம் எழுதி இருப்பது, பரபரப்பை மேலும் கூட்டி இருக்கிறது. தனது மனைவியை வைத்து தன்னை அரசியல் சூழ்ச்சியில் சிக்க வைக்க முயற்சி நடப்பதாக, சித்தராமையா குற்றம்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்