தமிழ்நாடு

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்பான்.. "சோதனை மேல் சோதனை.." - நடந்தது என்ன?

தந்தி டிவி

யூடியூப்-ல் ஃபுட் ரிவ்யூவராக கணக்கைத் தொடங்கி தற்போது சர்ச்சை நாயகனாக உருவெடுத்திருக்கிறார் இர்ஃபான்...

அண்மையில் தனது மனைவியின் கருவில் இருந்த சிசுவின் பாலினத்தை கண்டறிந்து பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தார்..

இந்த சர்ச்சை ஓய்ந்த ஒரு சில நாளிலேயே, அவரின் கார் விபத்து விவகாரம் குறித்து மற்றொரு யூடியூபர் பேசியிருந்ததும், அதற்கு இவர் பதிலளித்திருந்ததும் கடந்த கால வைரல் கண்டென்ட்..

இதற்கிடையில் தான் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு சிக்கியுள்ளார் இர்ஃபான்..

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, நடிகர் பிரசாந்த் தனது அந்தகன் திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக, ஒரு நேர்காணல் ஒன்றில் பைக் ஓட்டியபடி பேசியிருந்தார்.

அதில் பயணித்த தொகுப்பாளினியும் அவரும் ஹெல்மெட் அணியாததாக புகார்கள் எழ, இருவருக்கும் அபராதம் விதித்து அதிரடி காட்டியது போக்குவரத்து போலீஸ்...

இந்நிலையில், இதே போல் யூடியூபர் இர்ஃபானும் இருசக்கர வாகனம் ஒன்றில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது..

அதனை கவனித்து பார்க்கையில், இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட் இல்லாமலும் இருந்துள்ளது.

இதனை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் புகார் பறக்க..போக்குவரத்து போலீசாரின் கவனம் இர்ஃபான் பக்கம் திரும்பியது..

இந்நிலையில், இர்ஃபான் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக ஆயிரம் ரூபாயும், சேதமடைந்த நம்பர் பிளேட் பயன்படுத்தி சென்றதாக 500 ரூபாயும் என மொத்தம் ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக விதித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை.

அத்துடன், இது தொடர்பான புகைப்படத்தையும் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி