தமிழ்நாடு

தண்டவாளத்தில் இளைஞர் சடலம் - போலீசார் விசாரணை

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த இளைஞரின் உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்...

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு அருகே உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே வாலிபர் ஒருவர் அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் தவறி விழுந்து உடல் சிதறி இறந்து கிடந்தார்.பின்னர் இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியாத நிலையில் இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் ரயிலில் இருந்து கீழே விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்ற கோணத்திலும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்