தமிழ்நாடு

காவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் - கணுக்காலில் சுட்டுப் பிடித்த போலீசார்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூரில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெண் ஒருவர் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பெண்ணின் உடல் அருகே நின்று கொண்டிருந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் அளித்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். சென்னையை சேர்ந்த ரமேஷ், தனது காதலியுடன் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திண்டிவனம் அருகேயுள்ள ஒலக்கூர் கிராமத்தில் வாகனம் வந்தபோது, அங்கிருந்த 2 இளைஞர்கள் பெண்ணிடம் அத்துமீறி நடந்ததாகவும், அதில் தப்பிக்க நினைத்தபோது, தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் பெண் உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், தலைமறைவான இருவரை போலீசார் தேடி வந்த நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட உதயபிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது, காவலர்களான அய்யப்பன் மற்றும் தீபன் ஆகியோரை கத்தியால் தாக்கவிட்டு தப்பய முயன்ற உதயபிரகாஷை, காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் கணுக்காலில் சுட்டுப் பிடித்தார். இந்த சம்பவத்தில் காயம்பட்ட காவலர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நேரில் சந்தித்து எஸ்.பி. தீபக் சிவாக் நலம் விசாரித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி