செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் அருகே, இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் அமீத்.குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு பிணையில் வெளியே வந்துள்ளார்.இந்த நிலையில், இடுகாடு பகுதியில் ஏழு பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதையடுத்து தகவலறிந்து வந்து சாகுல் அமீத்தின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.