பாரிமுனையில் இருந்து கோயம்பேடு செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனியார் உணவகம் அருகே அமர்ந்திருந்த வடமாநில இளைஞரிடம், தேவன், மதுரை முத்து ஆகிய இருவர், போதைப்பொருள் கேட்டு அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். போதைப்பொருள் இல்லாதது தெரியவந்ததும் ஆத்திரம் அடைந்த அந்த இருவரும், வடமாநில இளைஞரை சென்னை மாநகர பேருந்து முன் தூக்கி வீசி எறிந்தனர். பேருந்தின் முன் சக்கரம் ஏறி இறங்கியதில் அந்த நபர் உயிரிழந்தார். விபத்தில் இளைஞரின் முகம் சிதைந்ததால், அவர் யார் என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.