தமிழ்நாடு

Chennai | சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இளைஞர் கொலை... பெரும் பரபரப்பு

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இளைஞர் கொலை... பெரும் பரபரப்பு

thanthitv

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இளைஞர் கொலை... பெரும் பரபரப்பு சென்னை ராமாபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு அடிதடியாக மாறியதில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்றிரவு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. 13-வது தெருவில் ஊர்வலம் பாதியிலேயே திரும்பியதால், முழுமையாக ஊர்வலம் செல்ல வேண்டும் என அப்பகுதியினர் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, அடிதடியாக மாறியதாக கூறப்படுகிறது. இதில் சீனிவாசன் என்பவர் தாக்குதலுக்கு உள்ளாகி, கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உரிய நேரத்தில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய ராமாவரம் போலிஸார் 5 பேரை கைது செய்துள்ளனர்.

Meenakshi Temple நாளை மறுநாள் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் - பக்காவாக நடக்கும் வேலைகள்

Byelection விஷயம் உண்மையா.. கம்யூ., கட்சிகள் அறிவிக்கும் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இவர்களா?

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்