தமிழ்நாடு

இளைஞரை கடத்தி மைனர் பெண்ணுடன் கட்டாய திருமணம்...

ஜோலார்பேட்டை அருகே, நள்ளிரவில் இளைஞரை கடத்தி மைனர் பெண்ணுடன் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரும், சக்கரகுப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் 17 வயது மகளும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால் இவர்களது காதலுக்கு, சதீஷின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மைனர் பெண்ணிடம் பேசுவதை சதீஷ் நிறுத்தியுள்ளார். இதனால் விரக்தியடைந்த பெண், சதீஷ் தன்னை ஏமாற்றிவிட்டதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த சதீஷை, அவரது நண்பர் திடீரென சக்கரகுப்பத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது,அங்கே காத்திருந்த மைனர் பெண்ணின் பெற்றோர், தங்கள் மகளின் கழுத்தில் சதீஷை கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைத்துள்ளனர். மறுநாள் இந்த தகவலை அறிந்த சதீஷின் தந்தை, ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் துணை ஆட்சியர் பிரியங்காவிடமும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்