தமிழ்நாடு

மனநலம் பாதித்து சுற்றித் திரிந்த வடமாநில இளைஞர் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு

மனநலம் பாதித்த நிலையில் சென்னையில் சுற்றி திரிந்த வடமாநில இளைஞர் ஒருவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தந்தி டிவி

சென்னையில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றி திரிந்த வடமாநில இளைஞர் ஒருவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம், ஹர்சத் மாவட்டத்தை சேர்ந்த, ஓம்பிரகாஷ் குப்தா என்ற இளைஞர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனார். சென்னை ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த குப்தாவிற்கு தனியார் மனநல காப்பகத்தினர் சிகிச்சை அளித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்னர் குணமடைந்த குப்தா, தனது முகவரியை காப்பகத்தினரிடம் கூறியதை அடுத்து அவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்