அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் நடுவெளி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த ஆண்டு 12 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். கடன் வாங்கியதைத் தொடர்ந்து மாதந்தோறும் தவணை கட்டி வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக மணிகண்டன் தவணை கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 2 ஊழியர்கள் மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி மூன்று மாத தவணையை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் விஷம் அருந்தி மயங்கியுள்ளார். அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.