தமிழ்நாடு

Highcourt | TN govt | மதுபானம் எடுத்து வந்த இளைஞர் | விதிகளை சொல்லி முடித்து வைத்த ஹைகோர்ட்

thanthitv

புதுச்சேரியில் இருந்து மது கொண்டுவந்தது தொடர்பான வழக்கு ரத்து தனி நபர் பயன்பாட்டுக்கு நான்கரை லிட்டர் மதுவை வைத்திருக்க தமிழக அரசின் விதிகள் அனுமதிப்பதால், புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு லிட்டர் 680 மில்லி மதுபானத்தை வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. புதுச்சேரியிலிருந்து தமிழகத்திற்கு 1 லிட்டர் 680 மில்லி மதுபானம் கொண்டு வந்த வல்லரசு என்பவர் மீது கடலூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், தமிழக அரசின் 2017-ம் ஆண்டு அரசாணையின்படி, தனிநபர் ஒருவர் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை 4.5 லிட்டர் வரை வைத்திருக்க அனுமதி உள்ளதாகக் குறிப்பிட்டார். மனுதாரர் வைத்திருந்தது அனுமதிக்கப்பட்ட அளவை விடக் குறைவு என்பதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது எனக் கூறி வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

BREAKING || ஐபிஎல் போட்டியில் அதிர்ச்சி... கிரவுண்டிலேயே சுருண்டு விழுந்த டெல்லி வீரர்

CSK | Chennai | MS Dhoni | நாளை சேப்பாக்கத்தில் `தல தோனி' தரிசனம்? - எதிர்பார்ப்பில் CSK ரசிகர்கள்

BREAKING || இந்திய வானிலை மைய இணையத்தில் முதன்மை மொழியாக இந்தி மாற்றம்

High court | Madurai | விவசாயி மீது துப்பாக்கிச்சூடு வழக்கு - அதிரடியாக கோர்ட் போட்ட உத்தரவு

Puducherry New Rules | தொடர் சோகம் - புதுச்சேரியில் அதிரடியாக அமலான புது ரூல்ஸ்